லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

தற்போது கையிருப்பில் உள்ள எரிவாயுத் தொகையை உணவகங்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய சேவை வழங்குனர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், உள்நாட்டு எரிவாயுக் கொள்கலன் விநியோகம் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 3,600 மெற்றிக் தொன் உள்நாட்டு எரிவாயு ஏற்றி வரும் கப்பல் எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கையை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், 3,600 மெற்றிக் தொன் உள்நாட்டு எரிவாயுவுடன் மேலும் Read More

Read more

3900 மெட்ரிக் டன் எரிவாயுவுடன் நாட்டிற்கு வந்தது கப்பல்!!

எரிவாயுவை நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக்கு அதிகமாக விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் காவல்துறையினரிடம் முறைப்பாடளிக்குமாறு அந்த நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார். அவ்வாறான வர்த்தகர்கள் தொடர்பில் எரிவாயு நிறுவனத்தின் 1311 என்ற இலக்கத்தை அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். நேற்று இரவு மாலைதீவில் இருந்து 3900 மெட்ரிக் டன் எரிவாயுவுடன் கப்பல் ஒன்று வருகை தந்துள்ளதாகவும் அதிலுள்ள எரிவாயுவை தரையிறக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதகாவும் தெரிவித்தார். இருப்பினும், நாட்டில் பல இடங்களில் எரிவாயுவை பெற Read More

Read more

மூன்று தின விநியோகத்திற்கு போதுமான எரிவாயு மாத்திரமே இருப்பில்!!

டொலர்களை வழங்கிய பின்னர் நேற்று 3 ஆயிரத்து 500 மெற்றி தொன் சமையல் எரிவாயும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த தொகை சுமார் மூன்று தினங்களுக்கு மாத்திரமே போதுமானது என எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. லிட்ரோ எரிவாயு நிறுவனம் சுமார் 200 மெற்றி தொன் எரிவாயுவை தொழிற்சாலைகளுக்கு வழங்குகிறது. மீதமுள்ள எரிவாயு 12.5 கிலோ கிராம், 5 கிலோ கிராம் மற்றும் 2.5 கிலோ கிராம் கொள்கலன்களில் அடைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. ஒரு தொன் எரிவாயு மூலம் 12.5 கிலோ கிராம் Read More

Read more

எரிவாயு விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முதல் மீள ஆரம்பம்….. லிட்ரோ நிறுவனம்!!

சமையல் எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. நாளொன்றுக்கு 120,000 வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எரிவாயுவை தாங்கி வந்துள்ள கப்பல்களுக்கான கொடுப்பனவுகள் நேற்று முன்தினம் மாலை செலுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று முதல் எரிவாயு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 3500 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பலில் உள்ள எரிவாயுவை கெரவலப்பிட்டியில் தரையிறக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எனவே, தற்போது நிலவும் Read More

Read more

நாட்டை நோக்கி விரையும் சர்வதேச கப்பல்கள்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயுப் பிரச்சினை காரணமாக மக்கள் அவதிப்படும் நிலையில் மேலும் 10,000 தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக லாப் கேஸ் (Laugfs Gas) எரிவாயு நிறுவனத்தின் தலைவர் W.K.H. வேகபிட்டிய (W.K.H.Vekappittiya) தெரிவித்துள்ளார். நாளாந்தம் 10,000 முதல் 15,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நாட்டில் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்யும் விதமாக சமையல் எரிவாயு நிரப்பிய மேலும் இரண்டு சர்வதேச கப்பல்கள் டிசம்பர் மாதம் இறுதியில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை Read More

Read more

வெடித்துச் சிதறி முற்றாக பற்றி எரிந்த வீடு!!

புத்தளம் – கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட குரக்கான்சேனையில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்ததில் சிறிய சில்லறைக் கடையுடன் கொண்ட வீடொன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணியளவில்  இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தினால் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் மேலும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மூன்று பிள்ளைகளுடன் தனிமையில் வாழ்ந்து வரும் தாய் சம்பவம் நடந்ததாக கூறப்படும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் தனது பேரப்பிள்ளைக்கு Read More

Read more

Laughfs Gas நிறுவனத்தின் விநியோகம் இன்று ஆரம்பம்!!

இலங்கை தர நிர்ணய நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் பரிந்துரைகளுக்கு அமைய இன்று நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக Laughfs Gas நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் எரிவாயு உரிய பரிந்துரைகளுக்கு அமைய விநியோகிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அடுப்புகள் தொடர்ச்சியாக வெடித்து வருவதால் மக்கள் தற்போது எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதை குறைத்து விறகை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more

பிரதான நகரங்களை முற்றுகையிடவுள்ள JVP….. காரணம் என்ன!!

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருளின் விலையேற்றம் உட்பட முக்கிய பிரச்சினைகளை மையப்படுத்தி – அதனை கண்டித்து நாட்டின் பிரதான நகரங்களில் மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி) ஆர்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர். அதன்படி, குறித்த ஆர்ப்பாட்டங்களை இன்றும், நாளையும் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், இன்றைய தினம் மகரகம, கிரிபத்கொட, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை, தம்புள்ளை, நீர்கொழும்பு, அநுராதபுரம் மற்றும் கினிகத்தேனை ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. மேலும், பதுளை, திருகோணமலை, பாணந்துறை, குருநாகல் மற்றும் சிலாபம் உள்ளிட்ட Read More

Read more

Cylinder வெடிப்பு விபத்தில் சிக்கிய பெண் இரு வாரங்களுக்குப் பின் மரணம்!!

சமையல் எரிவாயு விபத்து காரணமாக தீக்காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த மாத்தளை உடுபிஹில்ல பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 19 ஆம் திகதி சமையல் எரிவாயு அடுப்பை பற்றவைக்க முயற்சித்த போது உடலில் தீப்பிடித்துள்ளது. கடும் தீக்காயங்களுக்கு உள்ளான பெண், மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவருக்கு இரண்டு வாரங்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து இரண்டு தினங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய பெண் Read More

Read more

லிற்றோ நிறுவனம் வழமைபோன்று விநியோகம் தொடரும் என அறிவிப்பு!!

லிற்றோ எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கும் செயற்பாடு வழமை போன்று தொடரும் என நிறுவனத்தின் பேச்சாளர் சிங்கள ஊடகெமொன்றுக்கு தெரிவித்தார். பராமரிப்பு பணிகளுக்காக தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தாலும், சிலிண்டரிலிருந்து வாயு வெளியேற்றம் சாதாரணமாகவே இருந்ததாக அவர் குறிப்பிட்டார். எனினும், விநியோகத்தை இடைநிறுத்துமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண(Lasantha Alagiyawanna,) லிட்ரோ மற்றும் லாப்ஸ் காஸ் ஆகிய இரண்டிற்கும் கடிதம் எழுதியுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வாயுக்களால் வெளிப்படும் துர்நாற்றத்திற்குப் பயன்படுத்தப்படும் ‘மெர்காப்டன்’ என்ற Read More

Read more