உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மூடப்பட்ட கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய முக்கிய பகுதி!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விஐபி(VIP) முனையம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பொதுமக்கள் பயணம் செய்யாத வகையில் மூடப்பட்டுள்ளது. உயரதிகாரிகள் மாத்திரமே விமான நிலையத்தின் விஐபி(VIP) பகுதியை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்துத் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.ஏ.சந்திரசிறி (Maj. Gen. (Retd.) G. A. Chandrasiri  தெரிவித்தார். பிரமுகர்களுடன் பயணிக்கும் சாதாரண நபர்கள் மற்றும் நண்பர்கள் முனையத்தின் வழியாக செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அவர் மேலும் Read More

Read more

பேரணிகள் மற்றும் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மற்றும் ஒழுங்கு செய்தவர்களின் விபரங்களை CID இற்கு வழங்கவும்!!

ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை தீர்க்கக்கோரி நடத்தப்பட்ட பேரணிகள் மற்றும் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மற்றும் அந்த போராட்டங்களை ஒழுங்கு செய்தவர்களின் விபரங்களை சிஐடிக்கு வழங்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் சிஐடி அறிவுறுத்தியுள்ளது. 25,07, 2021 மற்றும் 05,08, 2021 முன் நடந்த போராட்டங்கள் பற்றிய தகவல்களை செப்ரெம்பர் 25 க்கு முன் அளிக்குமாறு சிஐடி செப்ரெம்பர் 06 ஆம் திகதி அனைத்து காவல் நிலையங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அதன்படி, ஆசிரியர்-தலைமை பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களின் இடங்கள் Read More

Read more

மட்டக்களப்பில் முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன் போது ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் கசிப்பு, கோடா பரல்கள் போன்றவையும் மீட்கப்பட்டதாக ஆயித்தியமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம். ஆர். எஸ். கோணர தெரிவித்தார். ஆயித்தியமலை கற்பானைக் குளம் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டபோது புலனாய்வு பிரிவின் இரகசிய தகவலுக்கமைவாக  சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த சுற்றிவளைப்பில் மூன்று பரல் கோடா, 25 லீற்றர் கசிப்பு மற்றும் Read More

Read more

கடல் மார்க்கமாக பிரான்ஸ் மற்றும் அவுஸ்ரேலியா செல்ல முயன்ற வடக்கு மாகாணத்தவர்கள் கைது!!

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பிரான்ஸ் மற்றும் அவுஸ்ரேலியாவிற்கு செல்ல முயன்ற 25 பேரை குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) மற்றும் கடல்சார் குற்றப் பிரிவு கைது செய்துள்ளது. மூன்று நாள் சிறப்பு நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, பரந்தன், பருத்தித்துறை, நீர்கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய இடங்களில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கடல் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தக் குழுவில் பெரும்பாலானவர்கள் பிரான்ஸ் Read More

Read more