கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

கர்ப்பிணித் தாய்மார்கள் இயலுமானவரை விரைவாக பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகிய 500 கர்ப்பிணிப் பெண்கள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர், வைத்தியர் சித்ரமாலி டி சில்வா (Dr. Chitramali de Silva) தெரிவித்துள்ளார். ஒமிக்ரோன் வைரஸ் தொற்றினால், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். சன நெரிசல் அதிகமுள்ள இடங்கள் மற்றும் அநாவசியமான பயணங்களைத் தவிர்க்குமாறு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வைத்தியர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

Read more