அடுத்து ஒரு முக்கிய உற்பத்தியும் இடைநிறுத்தப்பட்டது நாட்டில்!!

மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் திரிபோஷ உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லங்கா திரிபோஷ நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார். வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் திரிபோஷா இன்மையால் சிறுவர்கள் போசாக்கின்மைக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் திரிபோஷ நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தினால் திரிபோஷ விநியோகம் செய்யப்படுவதில்லையென முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே திரிபோஷ நிறுவனம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

Read more

3 வயது சிறுமியின் உயிரை பறித்தது தண்ணீர் பீப்பா!!

மட்டக்களப்பு-களுவாஞ்சிகுடியில் பிளாஸ்டிக் பீப்பாய் ஒன்றினுள் 3வயது சிறுமி தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று பிற்பகல் குறித்த சிறுமி வீட்டிலிருந்த வேளை தண்ணீர் குழாய் இருக்கும் இடத்திற்குச் சென்றுள்ளார். அதன் போது அங்கு இருந்த சிறிய பிளாஸ்டிக் பீப்பாயில் கையிலிருந்த ஜம்பு பழத்தை போட்டுள்ளார். பின்னர் அந்த பழத்தை மீண்டும் எடுப்பதற்கு முயற்சித்த வேளை சிறுமி தலைகீழாக பீப்பாய்க்குள் தவறி வீழ்ந்துள்ளார். 23 அங்குலம் உயரம் கொண்ட அந்த சிறியரக Read More

Read more

கடந்த ஆறு ஆண்டுகளில் 19,768 சம்பவங்கள் பதிவு!!

கடந்த ஆறு ஆண்டுகளில் சிறுவர் வன்முறைகள் தொடர்பான 19,768 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஆண்டு சிறுவர் மீதான வன்முறைகள் தொடர்பில் 3,373 முறைப்பாடுகள் எமக்கு கிடைத்துள்ளது. அவற்றில் 598 முறைப்பாடுகள், 5 வயதிற்கும் குறைந்த சிறுவர்கள் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பானவை, அவர்களில் 252 பேர் சிறுமிகள் ஆவார். வன்முறைக்கு உள்ளான சிறுவர்களில், Read More

Read more

13 வயது சிறுமியின் கொலை தொடர்பில் – பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்த உண்மை!!

முல்லைத்தீவு – மூங்கிலாறு கிராமத்தில் 13 வயது சிறுமி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக பொலிஸார் கூறினர். கொலை செய்யப்பட்ட சிறுமியின் உறவினர் ஒருவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மூங்கிலாறு கிராமத்தில் கடந்த 15 ஆம் திகதி காணாமற்போன 13 வயது சிறுமி யோகராசா நிதர்சனா கடந்த Read More

Read more

ஏணைக் கயிறு இறுகி நான்கு வயது பெண் குழந்தை பலி!!

வவுனியா அண்ணாநகர் பகுதியில் ஏணைக் கயிறு கழுத்தில் இறுகி நான்கு வயது பெண் குழந்தை பலியாகியுள்ளது. குறித்த குழந்தை ஏணையில் விளையாடிக்கொண்டிருந்த போது தவறுதலாக அதன் கயிறு கழுத்தில் இறுகியதில் குழந்தை பலியாகியுள்ளது. எனினும், குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளது. சம்பவத்தில் பரமேஸ்வரன் அருட்சிகா என்ற நான்கு வயது குழந்தையே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read more

வாழைப்பழத்தால் 11 மாத குழந்தையின் உயிர் பறிபோனது!!

நேற்று (12) மாலை வாழைப்பழத்தை உட்கொண்ட 11 மாத ஆண் குழந்தை தொண்டையில் சிக்கியதால் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர். அஹங்கம, அட்டுங்கலே தோட்டத்தில் வசிக்கும் குழந்தையே உயிரிழந்தது. அஹங்கம கிராமிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Read more

மேலுமொரு மரணமும் பதிவு….. மொத்த மரணங்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!!

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி படகு (மிதப்பு பாலம்) கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். படகு விபத்தில் பாதிக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த எஸ்.நிபா (06 வயது) என்பவரே இன்று காலை உயிரிழந்துள்ளார். இதற்கமைய, குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் சிக்கி உயிரிழந்தோரது எண்ணிக்கை 7ஆக உயர்வடைந்துள்ளது. இவரது சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் திகதி திருகோணமலை கிண்ணியாவில் உள்ள Read More

Read more

கர்ப்பிணி பெண்ககளிற்கு முக்கிய எச்சரிக்கைத் தகவல்….. வைத்தியர் சித்ரமாலி டி சில்வா!!

கொரோனா தாக்கம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட (Chitramali de Silva) தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், கொரோனா தாக்கம் காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணித்தாய்மார்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிப்பை காண முடிந்துள்ளது. எனவே, இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் அதனை விரைவில் Read More

Read more

7வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது போல….. வீட்டுப்பாடம் கொடுப்பதையும் ரத்துசெய்ய புதிய சட்டம் வகுக்கவுள்ள சீனா!!

சீனாவில் ஏற்கனவே 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எழுத்து தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் ரத்து செய்யப்பட்டிருந்ததைப் போலவே தற்போது வீட்டுப்பாடமும் ரத்து செய்யப்பட்டுள்ளது என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா காலத்தில் மற்ற நாடுகளை போல சீனாவிலும் பாடசாலை குழந்தைகளுக்கு இணைய வசதிகள்  மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டன. இதில் மாணவர்களுக்கு கடும் மன அழுத்தம் ஏற்பட்டு அவதிக்குள்ளானார்கள். இந்த நிலையில் பாடசாலைகள் திறக்கப்பட்டது. ஆனாலும் வீட்டுப்பாடங்கள் அதிகம் கொடுக்கப்பட்டது. இதனால் மாணவர்கள், குறிப்பாக Read More

Read more

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 12 வயது சிறுவன் பலி!!

பல்லம காவல்துறை பிரிவிற்குட்பட்ட கட்டுபொத்த பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல்லம பகுதியில் வசிக்கும் 12 வயதுடைய சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சடலம் சிலாபம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்லம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more