சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக பாரவூர்த்தி மோதியதில் பாடசாலை அதிபர் உட்பட இருவர் மரணம்!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக உந்துருளியை பாரவூர்த்தி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கந்தையா சத்தியசீலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்தில் படுகாயம் அடைந்தவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில், இன்று(27/05/2022) உயிரிழந்துள்ளார். கந்தையா சத்தியசீலன் முல்லைத்தீவு முத்தையன் கட்டு வலதுகரை முத்துவிநாயகர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Read more

சாவகச்சேரி காவல்துறை நிலையத்திற்கு அருகில் வேக கட்டுப்படடை இழந்த பஸ் விபத்து!!

சாவகச்சேரியில் இடம்பெற்ற சிறிய ரக பேருந்து விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி காவல்துறை நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்திலேயே இருவர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில், காவல் நிலையத்திற்கு அருகில் வேக கட்டுப்பாட்டை இழந்த மினிவான், வீதியோரமாக நின்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளானது. குறித்த விபத்தின் போது இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

Read more

முச்சக்கர வண்டி – குளிரூட்டி வாகனம் மோதல்…… ஆபத்தான நிலையில் சாரதி!!

முச்சக்கர வண்டியும், குளிரூட்டி வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலை, கொடிகாமம், இராமாவில் பகுதியில் இன்று நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டியை சேர்ந்த எஸ்.யுகிந்தன் என்ற இளைஞரே விபத்தில் படுகாயமடைந்துள்ளார். சாவகச்சேரி பகுதியில் இருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி இராமாவில் பகுதியில் வலது பக்கமாக அல்லாரை வீதிக்கு திரும்ப முற்பட்ட வேளை பின்னே பயணித்த குளிரூட்டி Read More

Read more

சாவகச்சேரியில் சடலமாக மீட்கப்படடர்….. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்!!

பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சுப்பிரமணியம் சிவபாலன் (51) என்பவதே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் தெரியவருகையில், சாவகச்சேரி தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் வெளிநாட்டவர் ஒருவருடைய தென்னம் காணியை குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே தென்னம் தோப்பிற்குள் அமைந்துள்ள வீடடடிலிருந்தே இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த வீட்டில் நடமாட்டமில்லாததை அவதானித்த அயல் வீட்டுக்காரர் வீட்டை எட்டிப் Read More

Read more