மூன்றும் நடக்காவிடின் இலங்கை “இருளில் மூழ்கும்”!!

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்வரும் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. 1. போட்டி ஏல முறையைப் பின்பற்றாமல், உள்ளூர் ஏலதாரர்களுக்கு எந்த சமமான வாய்ப்பையும் வழங்காமல், நாட்டின் காற்று மற்றும் சூரிய வளங்களை அதானி குழுமத்திடம் ஒப்படைத்தல். 2. 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தைத் திருத்துதல், கோரப்படாத முன்மொழிவுகள் Read More

Read more

எந்த நேரத்திலும் செயலிழக்கும் அபாயத்தில் நுரைச்சோலை!!

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையம் எந்த நேரத்திலும் செயலிழக்கும் அபாயத்தில் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின் நெருக்கடி காரணமாக நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையம் தொடர்ச்சியாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டியுள்ளமையால் சுமார் 15 அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மின் உற்பத்தி நிலையம் எந்த நேரத்திலும் செயலிழக்கும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read more

இன்றைய மின்தடை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!!

எரிபொருள் இருப்புகளைப் பொறுத்து இன்று திட்டமிடப்பட்ட மின்தடை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது அல்லது குறைக்கப்படலாம் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார். இன்று முதல் மின் துண்டிப்பை குறைப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பொதுமக்கள் மின்சாரத்தை தொடர்ந்தும் சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளது.

Read more

இன்றைய மின்வெட்டு தொடர்பான முக்கிய அறிவித்தல்!!

மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் கிடைக்க பெறாமையினால் இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க இன்றும் நாடு முழுவதும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, மாலை 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை 03 பிரிவுகளில் இரண்டு மணித்தியாலங்கள் மாத்திரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது. 541 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் இன்றும் மின் தடையை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக Read More

Read more

இன்று மின்வெட்டு தொடர்பில் CEB வெளியிட்டுள்ள தகவல்!!

இன்று மின்சாரத்தை விநியோகிப்பதில் தடை ஏற்படக்கூடும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்முனையங்களுக்கு அவசியமான எரிபொருள் கிடைக்காவிட்டால், இன்றைய தினமும் மின்சாரத்தை துண்டிக்க வேண்டி ஏற்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. சனிக்கிழமை என்பதால், இன்று மின்சாரத்திற்கான கேள்வி குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. மின்னுற்பத்திக்கு அவசியமான எரிபொருள் இன்மையால், கொலன்னாவ, களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையங்களின் இரண்டு மின்முனையங்களும், மத்துகம மற்றும் துல்ஹிரிய ஆகிய மின்னுற்பத்தி நிலையங்களும் செயலிழந்துள்ளன. இவ்வாறான பின்னணியில், இரண்டு கட்டங்களாக, Read More

Read more

புதிய விதிமுறைகளுடன் மூன்று மாதங்களுக்கு மின் வெட்டு இனி இல்லை என அறிவிப்பு வெளியிட்ட பொது பயன்பாடுகள் ஆணைக்குழு!!

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்படும் புதிய விதிமுறைகளின் கீழ் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கான அவசியம் இல்லை என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார். இதற்கான புதிய வழிமுறைகளை அமுல்படுத்துவதாக இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போது அவர் குறிப்பிட்டார். அதற்கமைய, பாரிய அளவில் மின்சாரத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள், தினமும் 4 மணித்தியாலங்கள் தங்களிடமுள்ள மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்தி , மின்சார தேவையை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். தொடர்மாடி குடியிருப்புகளில் வசிப்போர் மாலை Read More

Read more

மின்தடை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்!!

மின்சாரத்தை தடையின்றி பெறுவதற்கு தேவையான அளவு மின்சார உற்பத்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை  வரை மின்தடை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதில் நுகர்வோர் கவனம் செலுத்த வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Read more

வரும் திங்கட்கிழமை முதல் நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் மின்வெட்டு!!

தற்போதைய மின் நெருக்கடி உண்மையான மின் நெருக்கடியல்ல எனவும் எதிர்காலத்தில் இலங்கை மின்சார சபையை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான திட்டமிட்ட முயற்சியே இது எனவும் ஐக்கிய தொழிற்சங்கப் படையின் அழைப்பாளர் ஆனந்த பாலித (Ananda Palitha)தெரிவித்துள்ளார். எரிபொருள் இருப்புக்களை முறையாக பராமரிக்காததாலும், 70% நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாலும் மின் நெருக்கடி ஏற்பட்டதாக அவர் கூறினார். நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் பழுதடைந்து,   வருடாந்த உற்பத்தி சுழற்சியைப் பொருட்படுத்தாமல் நீர் Read More

Read more

நாட்டில் எகிறவுள்ளது மின் கட்டணங்களும்!!

நாட்டில் கட்டாயம்  மின்சார கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சார உற்பத்திக்கான செலவுகள் தற்போது அதிகரித்துள்ளதாலும் மின்சார சபை நீண்டகாலமாக நஷ்டத்தில் இயங்கி வருவதாலும் மின்சார கட்டணங்களை அதிகரித்தாக வேண்டும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போது மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றாலும் மக்கள் மின் உபகரண பயன்படுத்தல்களை குறைத்து, மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க உதவ வேண்டும் என கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த கோரிக்கைக்கு Read More

Read more

களனி திஸ்ஸ மின்னுற்பத்தி நிலைய இரு மின்பிறப்பாக்கிகளும் செயலிழப்பு!!

களனி திஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் உள்ள இரண்டு மின்பிறப்பாக்கிகளும் எரிபொருள் இன்மையால் நேற்றிரவு முதல் செயலிழந்துள்ளன. களனி திஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு மின்பிறப்பாக்கியில் இருந்து 115 மெகாவொட் மின்சாரமும் மற்றுமொரு மின்பிறப்பாக்கியில் இருந்து 165 மெகாவொட் மின்சாரமும் தேசிய மின்கட்டமைப்புக்கு விநியோகிக்கப்படுகின்றது. தேசிய மின்கட்டமைப்புக்கு 130 மெகாவொட் மின்சாரத்தை விநியோகிக்கும் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின், ஒரு முனையத்தின் திருத்தப் பணிகள் இன்றைய தினத்துக்குள் நிறைவு செய்யப்படவுள்ளன. இதுதவிர, எரிபொருள் இன்மையால் செயலிழந்திருந்த சப்புகஸ்கந்த மற்றும் கொழும்பு Read More

Read more