மீண்டும் வாகன இறக்குமதி!!

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அனுமதி வழங்க வாய்ப்பு இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith Nivard Cabraal )தெரிவித்துள்ளார். நேற்று(12) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், நாட்டிற்கு பெருமளவிலான அந்நியச் செலாவணியைத் பெற்றுத்தரக்கூடிய சுற்றுலாத்துறை போன்ற துறைகளில் எதிர்வரும் மாதங்களில் ஸ்திரத்தன்மையினை ஏற்படுத்துவதன் மூலம் இதனை சாத்தியப்படுத்தலாம் எனக் கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், ‘வாகனங்கள் மற்றும் ஓடுகள் தவிர Read More

Read more

இன்னும் 18 மாதங்களில் இலங்கையில் “கேபிள் கார்கள்”!!

கேபிள் கார் திட்டம் அடுத்த 18 மாதங்களுக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க முடியும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.   நுவரெலியா நகர அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு அங்கமான கேபிள் கார் திட்டம் அண்மையில் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. சுவீடன் வெளிநாட்டு உதவித் திட்டத்தின் கீழ் நானு ஓயாவிலிருந்து நுவரெலியா வரையிலான 4 கிலோமீற்றர் கேபிள் கார் திட்டத்திற்கு இரண்டு கட்டங்களாக நிதி வழங்கப்படவுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற Read More

Read more

வீடொன்றின் மதில் சுவரை இடுத்து உள்ளே சென்ற கார்….. ஆபத்தான நிலையில் இருவர்!!

மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம்  இன்று காலை 9 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீட்டு வளவிற்குள் புகுந்ததில்  விபத்திற்குள்ளாகிய இருவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து இடம்பெற்ற பகுதியில் அமைந்துள்ள தங்களது வீட்டு வாசலில் நின்று கதைத்துக் கொண்டிருந்த இவரே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் Read More

Read more

வாகனம் வாங்க காத்திருப்போருக்குகான தகவல்!!

இலங்கையில் கடந்த வருடம் முதல் வாகனம் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டில் வாகனங்களின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிக விலையில் வாகனங்களை விற்பனை செய்வதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் மீண்டும் வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கிய பின்னர் லீசிங் நிறுவனங்கள் பாரிய வீழ்ச்சியடைந்து பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட கூடும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாவனையில் உள்ள வாகனங்களை பாவிப்பது , வாகனங்களின் நிலையை வைத்து Read More

Read more

சாரதியின் தூக்ககலக்கதால் இன்றுகாலை ஏற்பட்ட விபரீதம்

சாரதியின் தூக்க கலக்கத்தால் கால்வாய்க்குள் கார்பாய்ந்து விபத்துக்குள்ளானதில் எட்டுவயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். ராஜாங்கனை பகுதியில் இன்றுகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த நிலையிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெலியத்தையில் உள்ள ஒரு நண்பரின் வீட்டிற்குச் சென்றுவிட்டு ராஜங்கனை ஆதம்பனேவில் உள்ள தங்கள் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, ​​தாய், தந்தை மற்றும் குடும்பத்தின் மூன்று மகள்கள் இந்த விபத்தை சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   Read More

Read more