பொதுப்போக்குவரத்துக்களில் கட்டாயமாக்கப்படும் தடுப்பூசி அட்டைகள்….. அமைச்சர் திலும் அமுனுகம!!

தடுப்பூசி அட்டைகள் பொதுப்போக்குவரத்துக்களின் போது கட்டாயமாக்கப்படும் என்று  ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், மூன்று தடுப்பூசிகளை செலுத்தியவர்கள் மாத்திரமே பயணிக்க முடியும் என்று சுகாதார பிரிவினர் அறிவித்தால், அதன்படி, போக்குவரத்துறையில், நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சு இந்த விடயத்தில் முடிவெடுக்க வேண்டியுள்ளது. இவர்கள் மாத்திரமே போக்குவரத்து பேருந்துக்களில் பயணிக்கமுடியும் என்று அந்த அமைச்சு கூறினால், அதனை போக்குவரத்து அமைச்சு நடைமுறைப்படுத்தும் என்றும் திலும் அமுனுகம Read More

Read more

பூஸ்டர் தடுப்பூசி மூலம் 85 வீதம் ஒமிக்ரோன் பரவலை தடுக்கலாம்!!

பிரித்தானியாவில் ஒமிக்ரோன் வைரஸ் திரிபு வேகமாக பரவிவருகின்ற நிலையில் இதுவரை 93,000 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில், கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பை பெற மூன்றாவது தடுப்பூசியாக பயன்படுத்தப்படும் பூஸ்டர் தடுப்பூசியானது ஒமிக்ரோன் திரிபினால் ஏற்படக்கூடிய 85 சதவீதமான தீவிர நோய் நிலைமைகளை தடுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. பிரித்தானியா ஆய்வுக்குழுவொன்று இதனை கண்டறிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக பூஸ்டர் தடுப்பூசி மூலம் ஒமைக்ரோன் தொற்றாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது கணிசமான அளவு குறைவடைவதாக Read More

Read more

“Booster” தடுப்பூசி இன்று (01/11/2021) முதல் வழங்கப்படுகின்றது!!

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தில் இன்று (01) முதல் பூஸ்டர் (Booster) தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றி 6 மாதங்கள் கடந்தோருக்கே பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக சுகாதாரத்துறை, முப்படையினர், பொலிஸார், விமான நிலைய ஊழியர்கள், சுற்றுலாத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட முன்னுரிமை வழங்கப்படுவோருக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதனிடையே, நேற்று 542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களில் கம்பஹா மாவட்டத்திலேயே பெரும்பாலானோர் தொற்றுடன் Read More

Read more

இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி

இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஃபைசர் தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாக வழங்குவதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். இதற்காக சம்பந்தப்பட்ட குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், சுகாதார சேவையில் உள்ளவர்கள் உட்பட முன்னணி ஊழியர்களுக்கும் ஃபைசர் பூஸ்டர் டோஸாக கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அந்த இலக்கை அடைந்த பிறகு, 60 வயதிற்குட்பட்டவர்களுக்கும் 20 வயதுக்கு மேற்பட்ட பல நோய்களால் அவதிப்படுவோருக்கும் பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.    

Read more

இலங்கை சனத்தொகையில் 67 சத வீதமானோருக்கு Booster தடுப்பூசிகள்!!

நாட்டின் சனத்தொகையில் 67 சத வீதமானோருக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளதுடன் அதற்கு தேவையான தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து பூஸ்டர் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ள நிலையில் அதற்கான முற்பணமும் செலுத்தப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். நாட்டில் இதுவரை ஒரு கோடியே 37 இலட்சத்து 49 ஆயிரத்து 897 பேருக்கு கொரோனா முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு கோடியே Read More

Read more