நாட்டில் சமுக ஊடகங்கள் முடக்கம்!!

இலங்கையில் சமுக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   ருவிட்டர்,முகநூல் மற்றும் வட்ஸ் அப் ஆகியவற்றின் செயற்பாடுகள் நேற்றிரவு(02/04/2022) செயலிழந்துள்ளன.   விலைவாசி உயர்வால் சிக்கித்தவிக்கும் இலங்கை மக்கள் தாமாக முன்வந்து அரசுக்கெதிரான போராட்டங்களை பரவலாக முன்னெடுத்து வரும் நிலையில் அரசாங்கம் இன்றையதினம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.   அத்துடன், ஊரடங்கு காலத்திலும் சமுக ஊடகங்கள் வாயிலாக தகவல்கள் பரிமாறப்படலாம் என்ற தகவலை அடுத்து அவற்றை அரசாங்கம் முடக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Read more

நான்கு இணையத்தளங்களுக்கு விதிக்கப்பட்டது தடை!!

கொழும்பின் கல்கிஸை பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைக்காக விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்ட 4 இணையத்தளங்களுக்கு தடை விதிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம், தேசிய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இன்றைய தினம் காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். கல்கிஸை பிரதேசத்தில் 16 வயது சிறுமி ஒருவர் Read More

Read more