கொழும்பின் பிரபல வைத்தியசாலையில் சிறுவனின் மரணம்….. முழுமையான விபரங்கள்!!

கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடர்பிலும், மருத்துவர்களின் செயற்பாடு தொடர்பிலும் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் ஆதாரங்களுடன் வெளிவந்திருக்கின்றன. சத்திர சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் தமது தரப்பில் தவறு நடந்ததை குழந்தையின் பெற்றோரிடம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று வயதான ஹம்தி எனும் சிறுவன் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக சிறுநீர் தொற்று நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து, அச்சிறுவனை லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் பரிசோதித்தபோது, Read More

Read more

திடீர் மின்தடை….. சத்திரசிகிச்சை நோயாளர்கள் எட்டு பேர் பாதிப்பு!!

நாட்டில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அறையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 8 நோயாளர்களின் சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதையடுத்து தேசிய வைத்தியசாலை அதிகாரிகளின் அலட்சியப்போக்கினால் பல அப்பாவி நோயாளிகளின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இன்றையதினம் முற்பகல் வேளை தொடக்கம் திடீரென நாடு முழுவது மின்சாரத்தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more