பாடசாலை வானுடன் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதல்….. சம்பவ இடத்திலேயே இருவர் மரணம்!!

அலவ்வ – கிரியுல்ல பிரதான வீதியின் மிரிஹெலிய பிரதேசத்தில் நேற்று(28/03/2022) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். லொறி ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது ​​எதிர்திசையில் வந்த பாடசாலை வானுடன் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர். அலவ்வ, உதகன்கந்த பகுதியைச் சேர்ந்த சிறினிமல் விக்கிரமசிங்க (37) மற்றும் பிரியங்கர சம்பத் (32) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். அலவ்வ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

முச்சக்கர வண்டி – குளிரூட்டி வாகனம் மோதல்…… ஆபத்தான நிலையில் சாரதி!!

முச்சக்கர வண்டியும், குளிரூட்டி வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலை, கொடிகாமம், இராமாவில் பகுதியில் இன்று நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டியை சேர்ந்த எஸ்.யுகிந்தன் என்ற இளைஞரே விபத்தில் படுகாயமடைந்துள்ளார். சாவகச்சேரி பகுதியில் இருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி இராமாவில் பகுதியில் வலது பக்கமாக அல்லாரை வீதிக்கு திரும்ப முற்பட்ட வேளை பின்னே பயணித்த குளிரூட்டி Read More

Read more

மாலுசந்தியில் ஆட்டோ – மோ. சைக்கிள் விபத்து….. 3 மாணவிகள் உட்பட 5 பேர் படுகாயம்!!

வடமராட்சி மாலுசந்தி வீதியில் நாய்கள் குறுக்கே பாய்ந்ததால் ஆட்டோ, மோட்டார் சையிக்கிள் விபத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் வடமராட்சி மாலுசந்தி வீதியில் அமைந்துள்ள சதாபொன்ஸ் தனியார் கல்வி நிலையத்திற்கு அருகாமையில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் 3 மாணவிகள் உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் , மாலுசந்தியில் இருந்து மந்திகை நோக்கி சென்ற ஆட்டோ தனியார் கல்வி நிலையம் தாண்டி சிறிது தூரத்தில் நாய்கள் கூட்டம் Read More

Read more

புகையிரதத்தில் மோதுண்டது முச்சக்கரவண்டி….. ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி!!

வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் மோதுண்ட முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் பலியாகி உள்ளனர். இந்த விபத்து இன்று முற்பகல் 10.45 மணியளவில் அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகள் மற்றும் மருமகள் ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர். இவர்கள் காலியை பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காலி – பூஸா வெல்லப்பட பகுதி ரயில் கடவையூடாக கடந்த முச்சக்கர வண்டியை ரயில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. ஒருவர் Read More

Read more

யாழ் – காரைநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் பலி!!

யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார். காரைநகர் டிப்போவுக்கு சமீபமாக முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். உயிரிழந்தவர் காரைநகர் நெய்தலைச் சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Read more

முச்சக்கர வண்டி தடம்புரண்டு விபத்து!!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் காயங்களுக்குட்பட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சவிகுடி காவல்துறையினர் தெரிவித்தனர். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கல்முனை பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வான் ஒன்றின் மீது, மட்டக்களப்பு பக்கமிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று தடம் புரண்டு வீழ்ந்து மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக இதனை Read More

Read more