ஆசிய விளையாட்டு 2023 பெண்கள் கபடி போட்டி….. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!!

பீஜிங்: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று நடைபெற்ற பெண்கள் கபடி போட்டி அரையிறுதியில் இந்திய அணி நேபாளத்தை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 61-17 என வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஈரான் அல்லது சீன தைபே அணியுடன் மோத உள்ளது.  

Read more