பேரூந்து – முச்சக்கரவண்டி மோதி விபத்து…… வவுனியாவில் சம்பவம்!!

வவுனியா தாண்டிக்குளம் கொக்குவெளி இராணுவ முகாம் முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (13) இரவு 7.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக் குறித்து மேலும் தெரிய வருகையில், வவுனியா நகரிலிருந்து ஏ9 வீதியூடாக பயணித்த இராணுவ பேரூந்து ஒன்று கொக்குவெளி இராணுவ முகாமிற்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் எதிர்திசையில் வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி அதனுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. விபத்தில் முச்சக்கரவண்டிச் சாரதி காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வவுனியா Read More

Read more