பால்மா, அரிசி, சமையல் எரிவாயு, சீமெந்து போன்ற பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்….. இலங்கை அரசாங்கம்!!

நாட்டில் ஒரு சில பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக பால்மா, அரிசி, சமையல் எரிவாயு, சீமெந்து போன்ற பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், நிர்ணய விலையை விட அதிக விலைக்கு பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கான தண்டப்பணம் இன்று முதல் ஒரு இலட்சம் முதல் 5 இலட்சம் வரை அதிகரிக்கப்படுகின்றது என இராஜாங்க அமைச்சர் லசன்த்த அழகியவண்ண தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை Read More

Read more

தமிழக பள்ளிகள் நாளை தொடக்கம் பாடசாலைகள் திறப்பு – தமிழக அரசு அனுமதி!!

நாளை தொடக்கம் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்காக பள்ளிகளைத் திறப்பதற்கு  தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது என இந்திய ஊடகங்ள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, செப்ரெம்பர் 15ஆம் நாள் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து கடற்கரைகளிலும், வழிபாட்டு Read More

Read more

யாழில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்- கட்டுப்படுத்துவதற்கு இதுவே வழி; அரச அதிபர் விடுத்துள்ள அறிப்பு!!

கொரோனா தொற்று அறிகுறி இருந்தால் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறுவதன் மூலம் இறப்புகளை தவிர்க்கலாம் எனயாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்றினால்  உயிரிழப்போரின் எண்ணிக்கை சற்று அதிகரிக்கும் நிலை காணப்படுகின்றது.   எனவே பொதுமக்கள் கொரோனா நோய் அறிகுறி காணப்படுமிடத்து உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று நோய்க்குரிய சிகிச்சையினை பெறுமிடத்து உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் Read More

Read more

தென்னாசியாவிலேயே இரண்டாம் இடத்தை பிடித்தது இலங்கை!

தென்னாசியாவில் அதிகளவில் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாமிடத்தை பிடித்துள்ளது. சர்வதேச கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டாளர் அமைப்பின் புதிய அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி நாட்டில் 60 வீதமானோர் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதாக தெரிவிக்க்பபட்டது. இந்தியாவில் இந்த எண்ணிக்கை 69 வீதமாக உள்ளது. நேபாளத்தில் 53 வீதமானோரும், பாகிஸ்தானில் 51 வீதமானோரும் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துகிறார்கள். தென்னாசியாவில் குறைந்தளவில் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடாக பங்களாதேஷ் உள்ளது. அங்கு 41 வீதமானோர் கையடக்கத் தொலைபேசிகளை Read More

Read more