யாழ் அரசாங்க அதிபர் முக்கிய அறிவித்தல் – அதிகரிக்கும் கொரோனா தொற்று!!

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று சற்று தீவிரமடைந்த நிலை காணப்படுகின்ற அதே வேளை இறப்புகளும் அதிகரித்து செல்கின்ற போக்கு காணப்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போதே க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதுள்ள நிலையில் அரசாங்கம் அறிவித்திருக்கிற புதிய சுகாதார விதிமுறைகளை மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் சுகாதாரத் திணைக்களம் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் இணைந்து செயற்படுத்தப்படுகின்றன. Read More

Read more