சீனி இறக்குமதிக்கு தடை விதிப்பு!!
இம்மாதம் 22ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சீனி இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளதாக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் தமயந்தி எஸ்.கருணாரத்ன தெரிவித்தார்.
இதன்படி தற்போதைக்கு இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ள கப்பலில் ஏற்றப்படாத சீனியை இறக்குமதி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு காணப்படும் சீனி தொகை 40 இறக்குமதியாளர்களிடம் இருந்து 200,000 டொன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டில் தேவையான அளவு சீனி இருப்பதால் இறக்குதி தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் ஊடாக டொலர் பெறுமதியை பாதுகாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எனினும் சீனி இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளதால் புறக்கோட்டை மொத்த விற்பனை நிலைய உரிமையாளர்கள் சிலர் வௌ்ளை சீனி கிலோ ஒன்றுக்கு 6 ரூபா மற்றும் சிவப்பு சீனி கிலோ ஒன்றுக்கு 10 ரூபா என அதிகரித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.