06 மற்றும் 09 வயது சகோதரர்கள் மரணம்!!

எரகம – வானேகமுவ பிரதேசத்தில் உள்ள கால்வாயில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனும் சிறுமியும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

 

நேற்று (06/05/20222) பிற்பகல் குறித்த இரு பிள்ளைகளும் நீராட சென்ற போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் பிரதேசவாசிகள் அவர்களை மீட்டு அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போது உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் 6 வயது சிறுவனும் 9 வயது சிறுமியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலங்கள் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் எரகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *