பிரபல சிங்கள நடிகைக்கு கிராண்ட்பாஸ் நீதிமன்று விதித்த உத்தரவு!!
சிறிலங்காவின் பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொடவுக்கு(Semini Iddamalgoda) 15 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு கொழும்பு பதில் நீதவான் பீ.டி.பெரேரா உத்தரவிட்டுள்ளார்.
அனுமதிப் பத்திரமின்றி பாதுகாப்பு சேவை நிலையம் ஒன்றை நடத்தி வந்த குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான முறைப்பாட்டை கிராண்ட்பாஸ் பொலிஸார் நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தனர்.
முறைப்பாடு தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்ற போது நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்பதால் நீதிமன்றம் சேமினியை கைது செய்ய பிடியாணை பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில்,
நேற்று அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியதுடன் பிடியாணை திரும்ப பெற நீதிமன்றம் தீர்மானித்தது.
குற்றச்சாட்டு தொடர்பான அறிக்கையை கிராண்ட்பாஸ் பொலிஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பின்னர் பதில் நீதவான் அதனை குற்றம் சுமத்தப்பட்டுள்ள நடிகை சேமினிக்கு மொழிப்பெயர்த்து விளக்குமாறு மொழிப்பெயர்ப்பாளர் சிந்தக உஹனோவிவுக்கு பணிப்புரை விடுத்தார்.
இதனையடுத்து அறிக்கையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நடிகை ஒப்புக்கொண்டார். இதனடிப்படையில்,
குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட குற்றவாளிக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.