என்றுமில்லாதளவில் நாட்டில் சீனிக்கு தட்டுப்படு!!

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் நடைமுறைப்படுத்திய போதிலும் நாட்டில் வெள்ளைச்சீனிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளை சீனிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் ஒரு கிலோ வெள்ளை சீனி 170 ரூபா வரை விற்பனையாவதாக கூறப்படுகிறது.

வெள்ளை சீனி தற்போது களஞ்சியசாலைகளில் இல்லையென இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வெள்ளை சீனிக்கான தட்டுப்பாட்டை போக்குவது தொடர்பில் நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ணவுக்கும்(Lacanta aḻakiyavaṇṇa) சீனி இறக்குமதியாளர்களுக்கும் இடையே நாளையதினம் விசேட சந்திப்பு நடத்தப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *