207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானம்!!

இம்முறை க. பொ. த சாதாரண தரப் பரீட்சை எழுதிய 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்த பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

உரிய பரீட்சார்த்திகளுக்கு பதிலாக வேறொருவர் பரீட்சைக்கு தோற்றியது தொடர்பாக பரீட்சை முறைகேடு குற்றச்சாட்டுக்கள் ஆறு பதிவாகியுள்ளன. மேலும்,

கையெழுத்து மாற்றம், விடைத்தாள் ,கையடக்க தொலைபேசிகளை தம்வசம் வைத்திருத்தல் மற்றும் ஒரேமாதிரியான விடைகள் போன்ற விடயங்கள் காரணமாக பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பரீட்சை முறைகேடுகள் தொடர்பாக, பரீட்சைத் திணைக்களத்திற்கு 4,174 முறைப்பாடுகள் கிடைத்திருந்ததுடன், அதுதொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் 3,967 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள பரீட்சார்த்திகளிடம் தனியான விசாரணை நடாத்தி மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பரீட்சை ஆணையாளர் சனத் பூஜித நேற்று (28) தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *