நாட்டை நோக்கி விரையும் சர்வதேச கப்பல்கள்!!
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயுப் பிரச்சினை காரணமாக மக்கள் அவதிப்படும் நிலையில் மேலும் 10,000 தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக லாப் கேஸ் (Laugfs Gas) எரிவாயு நிறுவனத்தின் தலைவர் W.K.H. வேகபிட்டிய (W.K.H.Vekappittiya) தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் 10,000 முதல் 15,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்யும் விதமாக சமையல் எரிவாயு நிரப்பிய மேலும் இரண்டு சர்வதேச கப்பல்கள் டிசம்பர் மாதம் இறுதியில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.