ஹட்டனில் இன்று அதிபர், ஆசிரியர்கள் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி!!
ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டிற்கான உரிய தீர்வை பெற்று தருமாறு கோரி பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று ஹட்டனில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அதிபர் ஆசிரியர் ஒன்றிணைந்த சங்கத்தினால் இன்று பிற்பகல் 03 மணிக்கு அட்டன் மல்லியப்பு சந்தியில் ஆரம்பமாகிய ஆர்பாட்ட பேரணிக்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுட்டனர்.
மல்லியப்பு சந்தியிலிருந்து ஆரம்பமாகிய பேரணி பிரதான வீதியூடாக ஹட்டன் மணிக்கூண்டு வழியாக பிரதான பஸ்தரிப்பிடம் வரை வந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர் ஆசிரியர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் நீண்ட கால கோரிக்கையான,
அதிபர் ஆசிரியர்களின் கொடுப்பனவை வழங்கக்கோரியும் கல்வித்துறையிலுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தரக்கோரியும் கோசம் எழுப்பியதுடன் பதாதைகள் ஏந்திய வண்ணம் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.