பிறப்பிக்கப்பட்டது உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம்!!
கொழும்பில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்து மறு அறிவித்தல் வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
முன்னதாக கொழும்பு தெற்கு, வடக்கு மற்றும் மத்திய பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை உடனடியாக நடைமுறைப்படும் வகையில் காவல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,
மேல் மாகாணம் முழுவதும் இந்த ஊரடங்குச் சட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி மற்றும் கொழும்பு தெற்கு பொலீஸ் பிரிவுகளில் மறுஅறிவித்தல் வரை பொலீஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.