இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 506 பேர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 506 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இது வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 4905 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.