ஸ்ரீலங்காவில் கொரோனா மேலும் உக்கிரமடையலாம் – மக்களே அவதானம்

 

 

 

 

 

 

ஸ்ரீலங்காவுக்குள் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நிலைமையானது அனர்த்தமான நிலைக்கு உக்கிரமடையக் கூடும் என சுகாதார துறை தொடர்பான அனுபவமுள்ள விசேட நிபுணர்களின் கருத்தாக இருப்பதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.

ஏற்படக் கூடிய தொற்று நோயை தவிர்ப்பதற்காக மக்கள் தமக்கான பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்வது மிகவும் முக்கியம். சுகாதார ஆலோசனைகளை கூடிய வரை பின்பற்றுமாறு மக்களிடம் தயவுடன் கோரிக்கை விடுக்கின்றேன்.

எவ்வாறாயினும் அனர்த்தமான நிலைமை ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவும் கொரோனா நிலைமையின் கீழ் தேர்தலை நடத்துவது சம்பந்தமாகவும் முன்வைக்கப்பட்டுள்ள வழிகாட்டல்கள் இதுவரை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடாமை கவலைக்குரிய விடயம்.

இந்த வழிக்காட்டலுக்கு அமைய மக்கள் மற்றும் தேர்தல் பிரசாரங்களை ஒழுங்கு செய்யும் நபர்கள் பின்பற்றுக்கின்றனர் என்பதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அதிகாரங்கள் எதுவும் அரச அதிகாரிகளுக்கு இதுவரை கிடைக்கவில்லை.

இந்த வழிகாட்டல்கள் வர்த்தமானியில் வெளியிட்டு சட்டமாக்கப்படாமையே இதற்கான காரணம் எனவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap