நாட்டில் உரதட்டுப்பாட்டின் எதிரொலி!!
உரத் தட்டுப்பாடு காரணமாக, ஒட்டுமொத்த நாட்டிலும் மரக்கறிகள் உள்ளிட்ட பிற பயிர்ச் செய்கையில் இருந்து விவசாயிகள் விலகிச் செல்வதாக விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
பொருளாதார மையங்களுக்கு மரக்கறி வரத்து குறைந்துள்ளதால் மரக்கறிகளின் விலை 100 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு 2.5 மில்லியன் கிலோ மரக்கறிகள் கிடைத்திருந்த நிலையில், தற்போது மரக்கறிகளின் இருப்பு 300,000 கிலோவாக குறைந்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் மழை அதிகரிப்பால் காய்கறிகளின் விலை மேலும் உயரும் என்றும் காய்கறி மொத்த வியாபாரிகள் கூறுகின்றனர்.
மொத்த சந்தையில் ரூ.200.00 ஆக இருந்த ஒரு கிலோ பீன்ஸ் சில்லறை சந்தையில் ரூ.450.00 ஆகவும், ரூ.280.00 ஆக இருந்த மிளகாய் கிலோ ரூ.540.00 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்த விற்பனை சந்தையில் பச்சை மிளகாய் கிலோ ரூ.120.00 ஆகவும், வெண்டைக்காய் கிலோ ரூ.170.00 ஆகவும், கரட் கிலோ ரூ.120.00 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.