கறுப்பு பட்டியலில் இலங்கை- ஐ.நா அதிரடி முடிவு

மனித உரிமை மீறல்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை 42 நாடுகளை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதுடன் அந்த நாடுகளில் ஒன்றாக இலங்கையும் பெயரிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மொத்த நாடுகளின் எண்ணிக்கை 193 ஆகும். மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறைகளைக் கணக்கிட்டு ஐக்கிய நாடுகள் சபையால் இலங்கை இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

நாடுகளின் விபரம் இதன்படி கறுப்பு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நாடுகளின் விபரம் வருமாறு, ஆப்கானிஸ்தான், அன்டோரா, பஹ்ரைன், பங்களாதேஷ், பெலாரஸ், ​​பிரேசில், புருண்டி, கேமரூன், சீனா, கியூபா, சைப்ரஸ், காங்கோ ஜனநாயக குடியரசு, ஜிபூட்டி, எகிப்து, குவாத்தமாலா, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், இஸ்ரேல், கஜகஸ்தான், லாவோஸ், லிபியா, மாலத்தீவுகள் , மாலி, மெக்ஸிகோ, மொராக்கோ, நிகரகுவா, பிலிப்பைன்ஸ், ரஷ்ய கூட்டமைப்பு, ருவாண்டா, சவுதி அரேபியா, தெற்கு சூடான், இலங்கை, பாலஸ்தீனம், தாய்லாந்து, துர்க்மெனிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வெனிசுலா, வியட்நாம் மற்றும் ஏமன்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *