மொபைல் கேமால் தூக்கிட்டு தற்கொலை செய்த வயது சிறுவன்!!

அநுராதபுரத்தைச் சேர்ந்த 12 வயது மாணவன் ஒருவன் கைத்தொலைபேசியைப் பயன்படுத்த பெற்றோர் மறுத்ததால் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அனுராதபுரம் புனித சூசையப்பர் கல்லூரியின் ஏழாம் தர மாணவர் என அடையா ளம் காணப்பட்டுள்ளார்.

இணையம் ஊடாக கற்றலின் போது தாயாரின் கைத்தொலைபேசியை பயன்படுத்திய குறித்த மாணவன் “Game” விளையாட்டில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது.

கைத்தொலைபேசியில் “Game” விளையாடும் பழக்கம் கொண்ட குறித்த மாணவன்

கடந்த 11ஆம் திகதி பாடசாலையைத் தவறவிட்டதால் அவரது தாயார் மாணவனைத் திட்டிவிட்டு,

கைத்தொலைபேசியை பறித்துச் சென்றுள்ளார்.

இதனால்,

கோபமடைந்தமாணவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாணவனின் தாயார் அரசாங்க நிறுவனத்தில் எழுதுவினைஞராகவும் தந்தையார் தனியார் பேருந்து நிறுவன ஊழியராகவும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *