எரித்துக் கொல்லப்பட்ட இலங்கைப் பிரஜை….. பிரதான சந்தேக நபர் உட்பட 100ற்கும் மேற்பட்டவர்கள் கைது (புகைப்படங்கள், விபரங்கள்)!!

இலங்கைப் பிரஜை பாகிஸ்தானில் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 100ற்கும் மேற்பட்டவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் பஞ்சாப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சியால்கோட்டில் உள்ள வசிராபாத் சாலையில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் முகாமையாளராகப் பணிபுரியும் இலங்கைப் பிரஜை ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை ஒரு கும்பலால் கடவுளை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சித்திரவதை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார்.

இச்சம்பவத்தில் பிரியந்த குமார என்ற இலங்கையைச் சேர்ந்தவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக சியால்கோட் மாவட்ட காவல்துறை அதிகாரி உமர் சயீத் மாலிக் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தை பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தானின் “அவமானத்தின் நாள்” என்று வர்ணித்தார்.

தொழிற்சாலையின் தொழிலாளர்கள் வெளிநாட்டவரை கடுமையாக தாக்கியதால் அவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்படடவர்கள்

மேலும்,

ஊழியர்கள் தொழிற்சாலையை சேதப்படுத்தி, போக்குவரத்தை தடுத்ததாகவும் காவல்துறையினர்  தெரிவித்தனர்.

எரியும் சடலத்தை சுற்றி நூற்றுக்கணக்கானோர் கூடியிருப்பதை, சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் காட்சிகள் வெளிக்காட்டுகின்றன.

இந்த கொலை சம்பத்தை கண்டித்துள்ள பஞ்சாப் முதல்வர் உஸ்மான் புஜ்தார், இது ஒரு “மிகவும் சோகமான சம்பவம்” என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் காவல்துறை உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2010 ஆம் ஆண்டு சியால்கோட்டில் அரங்கேறிய இதேபோன்ற ஒரு சம்பவம் பாகிஸ்தானை உலுக்கியது.

ஒரு கும்பல் இரண்டு சகோதரர்களை காவல்துறை முன்னிலையில் அடித்துக் கொன்றது.

இந்த கொடூர கொலைக் காட்சிகளின் பகிர்வு, வலைத் தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதால் இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் திகிலையும் ஏற்படுத்தியிருந்தமை நினைவில்கொள்ளவேண்டியது.

நாகரீகம் வளர்ச்சியடைந்த இந்த காலத்திலும் இவர்களை போன்று மதவெறிபிடித்த அடிப்படைவாதிகள் வாழ்ந்துகொண்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *