நாடளாவிய ரீதியில 89.3 சதவீதமானோர் சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்… மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம்!!
25 ரூபாயிற்கும் அதிகமாக சிகரெட்டுக்கான விலையை அதிகரிக்க வேண்டும் என பெரும்பான்மையானோர் உள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 89.3 சதவீதமானோர் சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளதாக குறித்த மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கணக்கெடுப்பின் அடிப்படையில் 31 சதவீதமான ஆண்கள் புகைப்பிடிப்பவர்களாக இருப்பதுடன்,
மேலும் 26 சதவீதமானவர்கள் அதிலிருந்து மீண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த ஆய்வின்போது சிகரெட்டுக்கான விலை எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என கேள்வி எழுப்பப்பட்டிருந்த நிலையில், அதற்கு 59.1 சதவீதமானோர் 25 ரூபாயிற்கும் அதிகமாக அதிகரிக்க வேண்டும் என பதிலளித்துள்ளனர்.
எதிர்வரும் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பெரும்பான்மையானோர் உள்ளதாக கூறப்படுகின்றது.