“சிம்பு”வீட்டு முன் சீரியல் நடிகை ஒருவர் சிம்புவை திருமணம் செய்து வைக்க கோரி போராட்டம்!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் “சிம்பு”வின் வீட்டு முன் சீரியல் நடிகை ஒருவர் தன்னை திருமணம் செய்து வைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தனியார் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான ‘7சி’ தொடரின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீநிதி.

அதன் பின்னர் யாரடி நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள் போன்ற தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார்.

அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கும் இவர், சமீபத்தில் சிம்பு குறித்து மீம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில் “ஒரு நாள் எல்லாருக்கும் திருமணம் ஆகிருக்கும், நானும் சிம்புவும் மட்டும் தான் சிங்கிளா இருப்போம்” என்று பதிவிட்டிருந்தது பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,

நடிகை ஸ்ரீநிதி தன்னை திருமணம் செய்துகொள்ளக் கோரி நடிகர் சிம்பு வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அவர்,

எனக்காக இத்தனை ஆண்டுகள் சிங்கிளாக இருந்திருக்கிறார் என்பதை என்னால நம்பவே முடியவில்லை.

இன்னைக்கு தான் புரிஞ்சது சிம்பு, எல்லாரும் எங்கள சேர்த்து வைங்க ப்ளீஸ்.

லேட்டா தான் புரிஞ்சது ஆனா புரிஞ்சிடுச்சு.

சிம்புவைத் தவிர நான் வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.

ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தான் போராட்டமா? லவ்வுக்கு எல்லாம் போராட்டம் இல்லையா? என்று பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை கிளப்பி வைரலாகி வருகிறது.

சீரியல் நடிகை ஸ்ரீநிதியின் Instagram பதிவை பார்வையிட இங்கே அழுத்துக……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *