கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ள நன்கொடை வழங்கும் ட்விட்டர்!!

கொரோனா தொற்றின் இரண்டாவது இந்தியாவை புரட்டி எடுத்து கொண்டிருக்கும் நிலையில் இப்பாதிப்பை எதிர்கொள்ள ரூ. 110 கோடி வழங்குவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.

இத்தகவலை ட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சி தனது சமூக வலைதள அக்கவுண்டில் தெரிவித்துள்ளார்.

 

இதன்படி CARE, Aid India மற்றும் Sewa International USA போன்ற மூன்று தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிதி தொகை தற்காலிக கொரோனா மையங்களை கட்டமைத்தல், ஆக்சிஜன் வழங்குதல், பிபிஐ கிட் மற்றும் இதர தேவையான உபகரணங்களை வழங்க பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *