சமுத்திரகனி ஹீரோ என்று தெரியாது….. பிரபல நடிகை!!
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபல நடிகராக வலம் வரும் சமுத்திரகனி ஹீரோ என்று தெரியாது பிரபல நடிகை ஒருவர் கூறி இருக்கிறார்.
சமுத்திரக்கனி நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ரைட்டர்.
நீலம் புரடக்ஷன் சார்பில் பா ரஞ்சித் தயாரித்திருக்கும் இப்படத்தில் இனியா கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.
இப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் இனியா பேசும் போது,
ரைட்டர் படத்தின் இயக்குனர் பிராங்க்ளின் என்னிடம் கதை சொல்லும் போது சிறப்பாக சொன்னார்.
ஆனால்,
அதில் என் கதாபாத்திரம் மட்டும் சொல்லவே இல்லை.
உங்கள் கதாபாத்திரம் சஸ்பென்ஸ் என்று சொன்னார். இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்து இருக்கிறேன்.
ரைட்டர் படத்தில் சமுத்திரகனி ஹீரோ என்று தெரியாது.
எதோ முக்கியமான கதாபாத்திரம் நடிக்கிறார் என்று நினைத்தேன்.

படப்பிடிப்பு தளத்தில் தான் தெரியும் அவர்தான் ஹீரோ என்று.
தயாரிப்பாளர் பா.ரஞ்சித் இயக்கத்தில் முழு படத்தில் நடிக்க ஆசை என்றார்.