சடுதியாக உயர்ந்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை!
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,083 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இன்று மேலும் 584 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா (Shavendra Silva)தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 589,479 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 145 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 561,557 ஆக அதிகரித்துள்ளது.