சாரதியின் தூக்ககலக்கதால் இன்றுகாலை ஏற்பட்ட விபரீதம்
சாரதியின் தூக்க கலக்கத்தால் கால்வாய்க்குள் கார்பாய்ந்து விபத்துக்குள்ளானதில் எட்டுவயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
ராஜாங்கனை பகுதியில் இன்றுகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த நிலையிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெலியத்தையில் உள்ள ஒரு நண்பரின் வீட்டிற்குச் சென்றுவிட்டு ராஜங்கனை ஆதம்பனேவில் உள்ள தங்கள் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, தாய், தந்தை மற்றும் குடும்பத்தின் மூன்று மகள்கள் இந்த விபத்தை சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.