பொதுமக்கள் – அரச நிறுவனங்கள் தொடர்பாடல் நடைமுறையில்….. பொது நிர்வாக அமைச்சகத்தினால் மறுசீரமைப்புகள்!!

பொதுமக்களுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் இடையேயான தொடர்பாடல் நடைமுறையை பொது நிர்வாக அமைச்சகம் மறுசீரமைத்துள்ளது.

எதிர்காலத்தில்,

அரசாங்க நிறுவனங்களுடன் தொடர்புகொள்ளும் போது தமது தொலைபேசி இலக்கங்கள்,

வட்ஸ் அப் மற்றும் மின்னஞ்சல் விபரங்களைச் சேர்த்துக்கொள்ளுமாறு அமைச்சு இன்று(02/09/2022) பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுமக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்கள் பொதுமக்களிடமிருந்து மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் தபால் கடிதங்களை அனுப்பும் போது,

பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பான விசேட சுற்றறிக்கையை அமைச்சு வெளியிட்டுள்ளது.

அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் தீர்க்கப்படக்கூடிய விடயங்கள் தொடர்பாக அரச நிறுவனங்களுக்கு பொதுமக்கள் தெரிவிக்க அனுமதிக்காமல் நடைமுறைகளை திறமையாக பின்பற்றுமாறு அரச ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *