ராஷ்மிகாவிற்கு தற்போது கன்னட திரையுலகில் நடிக்க தடை!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகாவிற்கு தற்போது கன்னட திரையுலகில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னட திரையுலகில் அறிமுகமான நடிகை ராஷ்மிகா தற்போது தமிழ் தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
இவரின் நடிப்புக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்றால் மிகையாகாது.
அந்தளவு யதார்த்தமான நடிப்பு திறன் கொண்டவர்.
தற்போது இந்தியளவில் களக்கி வரும் ராஷ்மிகா கன்னட சினிமாவில் தான் தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தார் என்பதை மறந்து செயற்பட்டு வருகிறார்.
இந்நிலையில்,
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல தொலைக்காட்சி ஏற்பாடு செய்த பேட்டியொன்றில் அவர் முதலில் நடித்த கன்னட சினிமா பற்றி அவதூறாக பேசியுள்ளார்.
மேலும்,
கன்னட திரையுலகை அவமானப்படுத்தும் வகையில் நடந்துக் கொண்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்களும் திரையுலகமும் கன்னட திரைப்படங்களில் ராஷ்மிகா நடிக்க தடை விதித்துள்ளனர்.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.