ரணிலால் ஏற்படவுள்ள அரசியல் மாற்றம்! விறுவிறுப்பாய் நகரும் அரசியல் களம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் அரசியலமைப்பின் 21வது திருத்தம் நிறைவேற்றப்படவுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அதிகாரம் வழங்குதல் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையின் அதிகாரங்களைக் குறைத்தல் போன்ற விடயங்கள் உள்ளடக்கிய அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 21ஆவது அரசியலமைப்பு திருத்தம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஏற்கனவே, பல கட்சிகள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் 21வது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.

21வது திருத்தச் சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்துமாறு பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடந்த நாட்களில் ஊடக சந்திப்புகள் நடத்தி கூறியுள்ளனர்.

அத்துடன், 21வது திருத்தம் கொண்டுவரப்பட்டால் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் அரசியலமைப்பின் 21வது திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *