இலங்கைக்கு உயர்மூச்சு வழங்கிய இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி….. நாடாளுமன்றில் ரணில்!!
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்காக சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்துகொள்வதற்கு அனைத்து கட்சிகளுக்கும் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
9 ஆவது நாடாளுமன்றின் மூன்றாவது கூட்டத்தொடரில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தனது கொள்கை உரையிலேயே நிகழ்த்தும் போது இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
” பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த இலங்கைக்கு உயர்மூச்சு வழங்கிய இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி.
நாடாளுமன்ற உறுப்பினர்களை எவ்வாறு தெரிவு செய்தலும் நாம் அனைவரும் இலங்கையர்களே
அதேபோல,
நானும் எவ்வாறு அதிபராக தெரிவு செய்யப்பட்டாலும் நானும் இன்று இலங்கையராகவே உங்கள் முன் நிற்கிறேன்.
நாடு இதுவரை முகம் கொடுக்காத ஓர் பிரச்சினையை இப்போது முகம் கொடுக்கிறது.
இந்த நிலையை மாற்ற இன்று நாம் அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தில் அனைவரும் இணைந்து செயல்படுவதே மக்களின் எதிர்பார்ப்பு.
பிரிந்து செயற்படுவதன் மூலம் முழு நாடும் பாதிக்கப்படும்.
அத்துடன்,
அனைவரையும் இணைந்து செயல்பட அழைக்கிறேன்.
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பாக நான் கலந்துரையாடல்களை தொடங்கி இருக்கிறேன்.
சர்வகட்சி அரசாங்கம் என்பது ஒரு கட்சியாக செயல்படுவது அல்ல.
அனைவரும் இணைந்து செயல்படுகின்ற ஒரு அரசாங்கம் ஆகும்.
இதன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்.
சர்வகட்சி அரசாங்கத்தின் அவசியத்தை நான் மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்த விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டார்.
9 ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று(03/08/2022) வைபவ ரீதியாக ஆரம்பமாகவுள்ளது.
முதலாவது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவின் வருகையும்
அதனைத் தொடர்ந்தும் பிரதமர் தினேஸ் குணவர்தனின் பிரச்சன்னமும் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்தும் அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முதற் பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க ஆகியோரின் வருகை இடம்பெற்றது.
அதிபரின் வருகையின் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன்
அதிபருக்கு முப்படையினரின் கௌரவம் அளிக்கப்பட்டது.
பின்னர் அதிபர் ரணில் விக்ரமசிங்க பிரதான நுழைவாயிலுக்கு அருகில் அழைத்து செல்லப்பட்டதுடன்
கொழும்பு தேவி பாலிகா வித்தியாலய மாணவிகளால் ஜயமங்கல கீதம் இசைக்கப்பட்டு ஆசி வேண்டப்பட்டது.
இதனையடுத்து,
நாடாளுமன்ற அங்கி அறைக்கு அதிபர் அழைத்துசெல்லப்பட்டார்.
இந்நிலையில்,
காலை 10.25 க்கு ஒலிக்க ஆரம்பிக்கும் கோர மணி 5 நிமிடங்கள் ஒலிக்கும்.
பின்னர் சபாநாயகர் மற்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்க சபா மண்டபத்துக்குள் பிரவேசிப்பர்.
அதனைத்தொடர்ந்து,
அதிபர் அக்கிராசனத்தில் அமர்ந்து அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை நிகழ்த்துவார் என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.