ரஜினி, விஜய்யின் வெற்றி ரகசியம் இதுதான் – விஜய் சேதுபதி சொல்கிறார்
ரஜினி, விஜய்யின் வெற்றி ரகசியம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
விஜய் சேதுபதி இமேஜ் பார்க்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. சீதக்காதியில் வயதானவராக வந்தார். விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லன் வேடம் ஏற்றார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார்.
இந்நிலையில், ரஜினியிடமும், விஜய்யிடமும் தான் எந்தவித பந்தாவையும் பார்த்ததில்லை என விஜய் சேதுபதி கூறியுள்ளார். அதேபோல், ஷூட்டிங்குக்கு வந்து விட்டால் அந்த கதாபாத்திரத்தை தவிர, வேறு எதைப் பற்றியும் அவர்கள் சிந்திப்பதே இல்லை என தெரிவித்துள்ள விஜய் சேதுபதி, அவர்கள் வெற்றியின் ரகசியம் இதுதான் என்பதை, தான் அப்போதுதான் புரிந்து கொண்டதாக கூறியுள்ளார். மேலும் ரஜினி, விஜய்யுடன் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.