பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்
கல்பிட்டி பகுதியில் பூப்புனித நீராட்டு விழாவை பொலிஸார் தடுத்தி நிறுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
தற்போது நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு நிகழ்வுகளையும் நடத்த தடை அல்லது இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கல்பிட்டி பொலிஸ் பிரிவில் உள்ள காந்தா குலியா எச்சன் கடுவா மீன்பிடி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்தியுள்ளதாக கல்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயம்பதி பண்டார தெரிவித்தார்.
குழந்தைகள் உட்பட பெரியவர்கள் ஏராளமானோர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டதால் அந்த விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.