சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி….. அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்ட்து மின்சார விநியோகம்!!

மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக அறிவித்து ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு நடைமுறைக்கு வருவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ள நிலையில்,

ஜனாதிபதி இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

நள்ளிரவு முதல் தமது கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காத நிலையில் மின்சார சபை பொறியிலாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அறிவித்திருந்தனர்.

நள்ளிரவு 12 மணி முதல் பணியில் இருந்து விலகுவோம்.

முடிந்தால் யாராவது பொறுப்பேற்று இந்த அமைப்பைச் செயற்பட வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இல்லையெனில்,

அனைத்து மின்சார சபை ஊழியர்களும் படிப்படியாக விலகுவார்கள்‘ என பகிரங்கமாக அறிவித்திருந்த நிலையில்,

சற்றுமுன் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை பொறியியலாளர்களின் தொழிற்சங்கங்கள் நேற்றிரவு ஜனாதிபதியுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் தமது வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டனர் என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *