“பொன்னியின் செல்வன்” புதிய அப்டேட் வழங்கியுள்ள படக்குழு….. படம் வெளியாகும் தேதி!!
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார்.
இபடத்தில்,
விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி,
ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர்.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில்,
‘அடிவானத்தில் ஏதோ விசேஷம் இருக்கிறது. என்னவென்று உங்களால் யூகிக்க முடிகிறதா..?
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் புதிய அறிவிப்பு நாளை(28/12/2022) மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் படக்குழுவின் Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக………..
இதற்கு ‘பொன்னியின் செல்வன்‘ இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.