வட மாகாண மென்பந்து துடுப்பாட்ட போட்டி….. கிண்ணத்தை சுவீகரித்தது கிளி/ அக்கராயன் ம.க அணி – 02வது இடத்தில் யா/ நெல்லியடி ம.க அ‌ணி!!

வட மாகாண பாடசாலைகளுக்கு இடை‌யிலான மென்பந்து துடுப்பாட்ட இறு‌தி போட்டி யாழ் /ம‌த்‌திய கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் யா /நெல்லியடி மத்திய கல்லூரி மறறும் கிளி /அக்கராயன் மத்திய கல்லூரிகள் பலப்பரீட்சை நடத்தினர்.

இதில் முத‌லி‌ல் துடுப்பெடுத்தாடிய கிளி /அக்கராயன் மத்திய கல்லூரி அணி 05 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுகளை இழந்து 61 ஓட்டங்களை பெற்று கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யா /நெல்லியடி மத்திய க‌ல்லூ‌ரி அணியினரால் 05 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுகளை இழந்து 53 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.

அதனடிப்படையில்,

கிளி/ அக்கராயன் ம‌த்‌திய க‌ல்லூ‌ரி அணி வெற்றி கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

சிறப்பாக விளையாடிய நெல்லியடி ம‌த்‌திய கல்லூரி அணி இரண்டாவது இடத்தை பிடித்து யாழ் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *