வடக்கில் அபிவிருத்தி செய்தோம் என்று கூறுபவர்கள் யாருக்காக செய்தோம் என்பதை கூறுவார்களா என தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் ச அரவிந்தன் தெரிவித்தார்

வடக்கில் அபிவிருத்தி செய்தோம் என்று கடந்தகால அரசாங்கமும் அதில் இருந்தவர்களும் கூறிவருகின்றனர் ஆனால் செய்யப்பட்ட அபிவிருத்தி வேலைகளை தமிழ் மக்கள் பயன்படுத்தக் கூடியதாக உள்ளதை யாராவது சிந்தித்தார்களா என்பதே இன்றைய கேள்வி குறிப்பாக மயிலிட்டி துறைமுகம்  அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது அனால் எங்கள் கடற்தொழிலாளர் பயன்படுத்துகிறார்களா  என்றால் இல்லை ஆனால் மயிலிட்டி துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது என்பதே வெளிப்பாடு நமது கடற்தொழிலாளர் பயன்படுத்த முடியாதசூழலே உள்ளது நாம் அப்பகுதி மக்களை சந்திக்கின்ற போது இந்த குறைபாட்டை கூறுகிறார்கள் இவ்வாறே பல அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளது  எமது பிரதேசங்களில் இடம்பெற்ர அபிவிருத்திகள் இவ்வாறே இடம்பெற்றுள்ளது இத்தகைய அபிவிருத்திகள் தேவையா ? இந்த அபிவிருத்திகள் யாருக்கானது யாருக்கானது அபிவிருத்தி என்பதே கேள்வி அபிவிருத்திக்கு நாங்கள் தடையில்லை ஆனால் இங்கு நடைபெறும் அபிவிருத்திகள் மக்கள் பயன்படுத்தும் விதத்தில் நடைபேறவேண்டும் என்பதே வேண்டுகோள் இந்த கோரிக்கை எல்லோருக்குமானது மக்கள் இந்த விடயங்களில் கூடிய அக்கறை செலுத்தி தேர்தலின் போது சரியான முறையில் தமது வாக்குபலத்தை பயன்படுத்த வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap