கோவிலுக்கு வந்த பெண்களிடம் 3,017,500 ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளை….. ஒன்பது பேர் கைது!!

கோவில் பூசை வழிபாட்டில் கலந்து கொண்ட பெண்களிடம் தமது கைவரிசையை காட்டி

இலட்சக்கணக்கான தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட இந்திய பெண் ஒருவர் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா, புடலு ஓயா கீழ் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கோவிலுக்கு பூசைக்கு வந்த பெண் ஒருவர் அணிந்திருந்த 850000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு தங்க நெக்லஸ்,

மற்றொரு பெண்ணின் கழுத்தில் இருந்த 1657500 ரூபாய் மதிப்புள்ள நகை,

மற்றைய பெண் அணிந்திருந்த 510000 ரூபாய் மதிப்புள்ள தங்க நகையும் இவர்களால் திருடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் திருட்டில் ஈடுபட்ட இந்திய பெண் ஒருவர் உட்பட,

ஆறு பெண்களும்,

மூன்று ஆண்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக புடலு ஓயா காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இந்தியப் பெண்ணொருவரும் இந்திய ஆணும் அடங்குவதுடன் ஏனைய சந்தேக நபர்கள் புத்தளம், திகன, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களைச் சேர்ந்த 35, 55, 47, 39, 47 மற்றும் 29 வயதுடையவர்கள்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை புடலுஓயா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *