புது விவோ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக்!!!!

விவோ நிறுவனம் மீடியாடெக் 5ஜி பிராசஸர் கொண்ட புது ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றிய தகவல் தற்போது கீக்பென்ச் தளத்தில் வெளியாகியுள்ளது.

அதன்படி இந்த ஸ்மார்ட்போன் V2123A எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதாக தெரிகின்றது. இது மீடியாடெக் டிமென்சிட்டி 900 5ஜி பிராசஸர் 6nm முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய விவோ ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கீக்பென்ச் சோதனையில் சிங்கில் கோரில் 3467 புள்ளிகளையும், மல்டி கோரில் 8852 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது.

மேலும் இது விவோ எக்ஸ்70 மாடலின் ரி-பிரான்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. இதே ஸ்மார்ட்போன் ஐகூ பிராண்டிங்கிலும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *