முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சேர்க்கப்பட்ட்து புதிய பாடம்!!
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆங்கில மொழியின் நடைமுறைப் பயன்பாட்டை மார்ச் 2023 முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்வு நேற்று(19/11/2022) கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் ஆரம்பமானது.
இதற்காக நாடளாவிய ரீதியில் சுமார் 450 பயிற்றுவிப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு முறையான பயிற்சிகளை வழங்கிய பின்னர்,
அவர்கள் முதலாம் வகுப்பிற்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கவுள்ளனர்.
இந்த மாகாண ஆசிரியர் பயிற்சித் திட்டத்தின் பின்னர்,
2023 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணை முதல் நடைமுறைச் செயற்பாடுகளின் அடிப்படையில் ஆங்கில மொழியைப் பயன்படுத்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.