புதிய அமைச்சரவை இன்று பதவி பிரமாணம்!!
புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் இன்று இடம்பெறவுள்ளது என தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக அமைச்சர் பதவியில் இருந்தவர்களும் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும்,
ராஜபக்ச குடும்பத்திற்கு மிகக் குறைந்த அளவிலான அமைச்சு பதவிகள் மட்டுமே இருக்கும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை,
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நாடு முழுவதும் பரவியுள்ளது.
அரச தலைவர் உடன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் வலுபெற்றுள்ளது.
இந்நிலையில்,
கடந்த ஞாயிற்றுக்கிழமை அரச தலைவர் தலைமையில் இடம்பெற்ற அவசர கூட்டத்தின் போது பிரதமர் தவிர்ந்து முழு அமைச்சரவையும் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி,
இன்று புதிய அமைச்சரவை பதவி பிரமாணம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.