நேரடியாக டி.வி.யில் வெளியாகும் கதிர் திரைப்படம்
பரியேறும் பெருமாள், பிகில் படத்தை தொடர்ந்து கதிர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் நேரடியாக டி.வி.யில் வெளியாக இருக்கிறது.
பரியேறும் பெருமாள், பிகில் படத்தை தொடர்ந்து கதிர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சர்பத்’. 7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் – வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கும் ‘சர்பத்’ படத்தை பிரபாகரன் இயக்கி இருக்கிறார்.
இதில் கதிருடன் முதல் முறையாக சூரி இணைந்து நடித்திருக்கிறார். கதாநாயகியாக ரகசியா அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து, ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில், சர்பத் திரைப்படம் நேரடியாக டி.வி. வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் விக்ரம் பிரபு நடித்த புலிக்குத்தி பாண்டி, சமுத்திரகனி நடித்த ஏலே படங்கள் நேரடியாக டி.வி.யில் வெளியானது குறிப்பிடத்தக்கது.